உயிரிலும் மேலான எந்தனின் இயேசு
உயிரினில் இரண்டற கலந்தவர் நீரே (2)
உந்தனின் நேசமே மாறாததய்யா
உந்தனின் நேசம் மாறாதே
உம்மை ஆராதிப்பேன்-2
உயிருள்ளவரை உம்மை ஆராதிப்பேன்(2)
ஒருவரும் சேரக்கூடாத ஒளியில்
வாசம் செய்திடும் நேசர் நீரே (2)
எந்தனின் ஆசையே எந்தனின் நேசமே
எனதெல்லாம் நீங்க தானையா - உம்மை
உம்மையே ஆசையாய் நோக்கிடுவேனே
உம் சாயல் கண்டு நான் திருப்தியாவேனே (2)
உம்முக பிரகாசம் எந்தனில் வீசுதே
பிரசன்னம் நிரப்பிடுதே -
உம்மை
ஒன்றான மெய் தேவன் நீரே இயேசய்யா
ஒருவராய் அதிசயம் செய்பவர் நீரே (2)
எந்தனின் மகிமையே எந்தனின் கிரீடமே
ஜீவனும் சுவாசமும் நீரே -
உம்மை